ஆயிரங்கண் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா - பக்தர்கள் நேர்த்திக்கடன்

அருப்புக்கோட்டை அருள்மிகு ஆயிரங்கண் மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்

Update: 2024-05-03 06:46 GMT

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புளியம்பட்டி அருள்மிகு ஸ்ரீ ஆயிரங்கண் மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழா கடந்த 23 ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது இந்நிலையில் நேற்று பங்குனி பொங்கல் விழாவின் முக்கிய நிகழ்வான அக்னி சட்டி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடும் விரதம் இருந்து ஆட்டம் பாட்டத்துடன் மேளதாளங்களுடன் உற்சாகமாக தங்களது கையில் அக்னி சட்டி ஏந்தி ஊர்வலமாக சென்று கோவிலில் மூன்று முறை சுற்றி வந்து ஆகோ அய்யாகோ என்ற பக்தி முழக்கத்துடன் அக்னி சட்டி செலுத்தி தங்களது நேர்த்திகடனை செலுத்தினர் அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த அம்மனை வழிபட்டு மகிழ்ந்தனர். மேலும் குதிரை பூட்டிய சாரட் வண்டியில் மேள தாளங்களுடன் அலங்கார மாலைகளை ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு சாற்றி வழிபட்டனர் இந்த விழாவில் புளியம்பட்டி வேலாயுதபுரம் திருநகரம் நெசவாளர் காலனி வெள்ளக்கோட்டை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News