அயோத்தி ராமர் கோயில் திறப்பு - அர்ச்சகர்களுக்கு அழைப்பிதழ்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அர்ச்சகர்களுக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

Update: 2024-01-19 04:15 GMT

கும்பாபிஷேக அழைப்பிதழ் 

உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ராமஜென்மபூமியில், ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்தச் சேத்திர அறக்கட்டளை நிர்வாகத்தால், 2.7 ஏக்கர் நிலப்பரப்பில் குழந்தை ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயில் கும்பாபிஷேக விழா வருகிற ஜனவரி 22ம் தேதி மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த கோயிலில் இருந்து, நாடு முழுவதும் அட்சதை மற்றும் கும்பாபிஷேக பத்திரிக்கை அனுப்பி வைக்கப்பட்டு, அவை பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மூலம் பொதுமக்களுக்கு வீடு வீடாக வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் நகரங்கள் மற்றும் கிராமங்கள் தோறும் பாஜகவினர் வீடு வீடாகச் சென்று அட்சதை மற்றும் கும்பாபிஷேக அழைப்பிதழை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர். பாஜக சிறுபான்மை அணி மாநில செயலாளர் ஷாஜஹான் தலைமையில் நாமக்கல் கோட்டை பகுதியில் அழைப்பிதழ்கள் வழங்கும் பணி நடைபெற்றது. கோட்டை நரசிம்மர் சுவாமி கோயில் வீதியில் வசிக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் பட்டாச்சாரியர்களின் வீடுகளுக்கு பாஜகவினர் நேரில் சென்று, ராமர் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழ்களை வழங்கினார்கள். ஆஞ்சநேயர் கோயில் அர்ச்சகர்கள் பொக்கிஷம் வெங்கடேசன் பட்டாச்சாரியார், விஜயநரசிம்ம பட்டாச்சாரியார், மோகன்ராம், ஜெயலட்சுமி, கண்ணன், வாசுதேவன் உள்ளிட்ட அனைத்து பட்டாச்சாரியார் வீடுகளுக்கு கோயில் அழைப்பிதழ் மற்றும் அட்சதை வழங்கப்பட்டது. வரும் 22ந்தேதி அன்று வீடுகள் தோறும் விளக்கேற்றி வழிபாடு செய்யுமாறு அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

Tags:    

Similar News