ஊத்தங்கரை கோயில்களில் அயோத்தி ராமருக்கு சிறப்பு யாக வழிபாடு

ஊத்தங்கரையில் உள்ள கோயில்களில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு யாக வழிபாடு நடந்தது.

Update: 2024-01-22 14:49 GMT

 கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் உள்ள கோயில்களில் அயோத்தி ராமருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது அதில் குறிப்பாக சுப்பிரமணிய சுவாமி முருகன் கோயிலில் அயோத்தி ராமர் கும்பபிஷேகத்தையொட்டி சிறப்பு யாக வழிபாடு நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு செங்குந்தர் முதலியார் சங்கத் தலைவர் மாதேஸ்வரன் தலைமையில், அயோத்தி ராமருக்கு சிறப்பு யாக வழிபாடு செய்தனர். இதில் செங்குந்தர் இளைஞர் சங்க தலைவர் சண்முகசுந்தரம், தொண்டு மன்ற தலைவர் மோகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துசாமி, செங்குந்தர் மாவட்டத் தலைவர் திருநாதன், மற்றும் பாஜக நிர்வாகிகள் முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் ஜெயராமன், சிவா, சிவகுமார், சங்கர், முருகம்மாள், தண்டபாணி, மாதவன், சத்தியமூர்த்தி மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஊத்தங்கரை காமராஜ் நகர் முருகன் கோயிலில் அயோத்தி ராமருக்கு சிறப்பு யாக வழிபாடு நடந்தது.

நிகழ்ச்சிக்கு பாஜக சக்திகேந்திரா பொருப்பாளர் ராஜ் தலைமையில் சிறப்பு யாக வேள்வி பூஜை நடைபெற்றது. இதில் பாஜக மாவட்ட மகளிர் அணி துணை தலைவி முருகம்மாள், மாவட்ட செயலாளர் வரதன், முன்னாள் ஒன்றிய தலைவர் சங்கர், மாநில பொது குழு உறுப்பினர் சிவக்குமார் சங்கீதா மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர். பக்தர்கள் அனணவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஊத்தங்கரை காசி விஸ்வநாதர் மற்றும் லட்சுமி நாராயணா கோயிலில் அயோத்தி ராமருக்கு சிறப்பு வழிபாடு செய்து வழிபட்டனர். நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறை அலுவலர்கள்,பொதுமக்கள்,பக்தர்கள் திரலாக கலந்துக்கொண்டனர்.பக்தர்கள் அணைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

ஊத்தங்கரை தர்மராஜா கோயிலில் சிறப்பு வழிபாடு செய்து ஊர்வலமாக சென்று வழிபட்ட பக்தர்கள்.இதில் பாஜக ஊத்தங்கரை தொகுதி பொருப்பாளர் ராஜேந்திரன், ஓபிசி அணி நிர்வாகி தாமோதரன், தயாளன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

Tags:    

Similar News