அயோத்தி பெண் ராமேஸ்வரத்திற்கு பாதயாத்திரை

நதிகள் ,மலைகள், சுற்றுச்சூழல் ஆகியவற்றின் பாதுகாப்பு மற்றும் அதன் பேணிக்காப்பதை வலியுறுத்தி அயோத்தியில் இருந்து ராமேஸ்வரம் வரை பாதயாத்திரையாக செல்லும் பெண்மணி மதுரைக்கு வந்தார்.

Update: 2024-03-06 12:25 GMT

நதிகள் மலைகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றின் பாதுகாப்பு மற்றும் அதன் பேணிக்காப்பதை மரபுமாறாமல் வலியுறுத்தி உத்திரபிரதேசம் அயோத்தியிலிருந்து சிப்ரா பதக் என்ற பெண்மணி தன் தாய் தந்தை மற்றும் குடும்பத்துடன் 4000 கி.மீட்டர் தூரம் பாதயாத்திரையாக நடந்து ராமேஸ்வரம் செல்ல உள்ளார்.

மதுரை வந்தடைந்துள்ள அவர் 12 லட்சம் மரக்கன்றுகளை நதியின் இருகரையிலும் மலைப்பாங்கான இடங்களிலும் நடும் முயற்சியாக இதுவரை 10 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளார் தண்ணீரின் தேவையை வலியுறுத்தும் அவர் வரும்காலங்களில் நீரை நாம் சிக்கனமாகவும் தேவையில்லாமலும் பயன்படுத்தினால் தண்ணீருக்காக உலகம் மூன்றாம் உலகப்போரை சந்திக்கவேண்டியிருக்கும் என்று கூறினார்.

தனது பாதயாத்திரையின் நோக்கமே நீர் நிலம் ஆகாயம் காற்று மற்றும் நெருப்பு போன்ற பஞ்சபூதங்களை உலக சமுதாயம் போற்றிப்பாதுகாப்பதே எனகூறும் சிப்ரா பதக் தனது பாதயாத்திரைக்கு ராம் ஜானகி யாத்ரா என பெயர் சூட்டியுள்ளார் மேலும் ராமேஸ்வரம் செல்லும் முன்பு இதை வலியுறுத்தி மதுரை கோச்சடையிலுள்ள குயின்மீரா சர்வதேசப்பள்ளி வளாகத்தில் மதுரை உயர்நீதிமன்ற நீதியரசர் விவேக்குமார் சிங் தலைமையில் மரக்கன்றுகளை நட்டுவித்து மாணவர்களோடு உரையாடினார். இந்நிகழ்வில் பள்ளியின் சேர்மன், தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News