குமரியில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி அதிகாரி சஸ்பெண்ட் உத்தரவு ரத்து

குமரியில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி அதிகாரி சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டது.

Update: 2024-06-30 15:26 GMT

குமரி ஆய்ர்வேத மருத்துவ கல்லூரி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாரில் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லை, வலு கட்டாயமாக அவரை வெளியேற்ற டாக்டர்கள் சிலர் முயன்றனர் என்று புகார் எழுந்தன.     

 இது தொடர்பாக கல்லூரி முதல்வர் க்ளாரன்ஸ் டேவி என்பவர் விசாரணை நடத்திய  விசாரணைக்கு  டாக்டர்கள் சிலர்  ஒத்துழைக்கவில்லை எனக் கூறப்பட்டது.       மேலும் கல்லூரி ஆவண காப்பக அறையை  திறந்து நோயாளிகளுக்கான விபர பதிவேடு திருத்தப்பட்டதாகவும் புகார் எழுந்தது.

இது  தொடர்பாக கல்லூரி முதல்வர் கிளாரன்ஸ் டேவி கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.      இந்த புகார் என்பேரில் போலீசார் மனு பதிவு செய்தனர். இந்த நிலையில் மருத்துவ கல்லூரி மருத்துவமனை உறைவிட மருத்துவர் பொறுப்பு டாக்டர் சுப்புராஜா என்பவரை சஸ்பெண்ட் செய்து கல்லூரி முதல்வர் உத்தரவிட்டார்.      

அவர் இதை எதிர்த்து சென்னையில் உள்ள இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதி ஆணையரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் மூன்று டாக்டர்கள் அடங்கிய குழுவினர் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிக்கு வந்து விசாரணை நடத்தினார்.    

 இந்த விசாரணை அறிக்கை அடிப்படையில் சுப்பரஜாவின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து தற்போது இந்திய மருத்துவ ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில் கல்லூரி முதல்வர் தரப்பில் தெரிவிக்கப்பட்ட புகாரில் உண்மை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News