மழைநீர் தேங்கி குளமாக மாறிய அய்யப்பன்தாங்கல் பஸ் நிலையம்

அய்யப்பன்தாங்கல் பஸ் நிலையத்தில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளதால், பயணிகள் அவதிப்படுகின்றனர்.

Update: 2024-06-14 14:30 GMT

 அய்யப்பன்தாங்கல் பஸ் நிலையத்தில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளதால், பயணிகள் அவதிப்படுகின்றனர். 

அய்யப்பன்தாங்கல் ஊராட்சி, மவுன்ட் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில், அய்யப்பன்தாங்கல் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கும், புறநகர் பகுதிகளுக்கும், 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்து நிலையம், பல ஆண்டுகளாக முறையான பராமரிப்பின்றி உள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், பல இடங்களில் மழைநீர் தேங்கி வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு போரூர், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் விளைவாக, அய்யப்பன்தாங்கல் பேருந்து நிலையத்தில், குளம் போல் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், பயணியர் பேருந்து நிலையத்திற்குள் செல்ல மிகவும் சிரமப்பட்டனர். ஒவ்வொரு மழைக்காலத்திலும் இப்பிரச்னை நீடிப்பதாக, பயணியர் குற்றம்சாட்டினர். இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். எனவே, இந்த பேருந்து நிலையத்தை உடனே சீர்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News