அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் - சமத்துவ உறுதிமொழி ஏற்பு.
அண்ணல் அம்பேத்கர் 133-வது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அலுவலர்கள் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றனர்.;
Update: 2024-04-12 08:39 GMT
சமத்துவ உறுதிமொழி ஏற்பு.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அண்ணல் அம்பேத்கரின் 133 வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது திருஉருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றனர். அப்போது ஜாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், ஜாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்குமுறைக்கு எதிராக போராடி, ஒடுக்கப்பட்டவர்களுடைய சமூகத்தினரை பாதுகாக்க குரல் கொடுப்போம். என மாவட்ட ஆட்சியர் உறுதி மொழியை வாசிக்க, மற்ற அனைத்து அரசு அதிகாரிகளும் அந்த உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.