ஊட்டியில் ஆம்புலன்ஸில் பிறந்த ஆண் குழந்தை!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நள்ளிரவில் பிரசவ வலி ஏற்பட்டு இளம் பெண்ணுக்கு ஆம்புலன்சிலேயே ஆண் குழந்தைப் பிறந்தது.

Update: 2024-04-01 13:52 GMT

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நள்ளிரவில் பிரசவ வலி ஏற்பட்டு இளம் பெண்ணுக்கு ஆம்புலன்சிலேயே ஆண் குழந்தைப் பிறந்தது.


ஊட்டி, நொண்டிமேடு பகுதியை சேர்ந்தவர் ரெஜினா மகள் ரோஸ்லின்,28. இவருக்கு திருமணம் ஆகி ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது. இரண்டாவது முறையாக நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ரோஸ்லின், தாயார் ரெஜினா வீட்டில் இருந்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு 1.30 மணி அளவில் ரோஸ்லினுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 108 ஆம்புலன்ஸுக்கு தொடர்பு கொண்டு முகவரி கூறி அவருடைய உறவினர்கள் ஆம்புலன்ஸை வரவழைத்தனர்.

15 நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்தது ஆம்புலன்ஸ், ரோஸ்லின் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டார். ஆம்புலன்ஸ் கிளம்பிய சற்று தூரத்திலேயே அவருக்கு பிரசவ வலி உச்சநிலையை அடைந்ததால், மருத்துவ உதவியாளர் சுஜித் குமார் உத்தரவின் பேரில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் சிவக்குமார் ஆம்புலன்ஸை சாலையோரம் நிறுத்த ரோஸ்லினுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

தொடர்ந்து தாயும், சேயும் ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் சமயோஜிதமாக செயல்பட்ட மருத்துவ உதவியாளர் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

Similar News