சிறுமிக்கு வளைகாப்பு இன்ஸ்பெக்டருக்கு சிக்கல்

பூந்தமல்லியில் வழக்கு விசாரணைக்கு வந்த சிறுமிக்கு வளைகாப்பு நடத்தியதால் இன்ஸ்பெக்டருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Update: 2024-06-15 12:32 GMT

பூந்தமல்லியில் வழக்கு விசாரணைக்கு வந்த கர்பிணி சிறுமிக்கு வளைகாப்பு நடத்திய சம்பவத்தில், மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் இந்திராணியிடம், ஆவடி கமிஷனர் சங்கர் நேற்று விசாரணை நடத்தினார். பூந்தமல்லி அருகே குமணன்சாவடியில் அனைத்து மகளிர் காவல் நிலையம் இயங்குகிறது. இங்கு பணியாற்றும் பெண் காவலர்கள் நான்கு பேர் கர்பிணியாக உள்ளனர்.

இவர்கள் மருத்து விடுமுறையில் செல்ல உள்ளனர். அவர்களுக்கு காவல் நிலையத்தில் வளைகாப்பு நடத்த, மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் இந்திராணி ஏற்பாடு செய்தார். அப்போது, காதலனால் கர்ப்பமாக்கப்பட்ட ஏழை சிறுமி, வழக்கு விசாரணை தொடர்பாக, காவல் நிலையத்திற்கு வந்தார். இதையடுத்து, நான்கு பெண் காவலர்களுடன் சேர்ந்து கர்ப்பிணியாக இருந்த சிறுமிக்கும் வளைகாப்பு செய்து, வளையல், பழங்கள், இனிப்புகள், புத்தாடை உள்ளிட்ட சீர்வரிசைகளை ஆய்வாளர் இந்திராணி வழங்கினார்.

வழக்கு விசாரணைக்கு வந்த கர்ப்பிணி சிறுமிக்கு காவல் நிலையத்தில் வளைகாப்பு நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, பூந்தமல்லி பெண்கள் காவல் நிலைய ஆய்வாளர் இந்திராணி விசாரணைக்காக நேற்று ஆவடி காவல் ஆணையரகத்திற்கு வரவழைக்கப்பட்டார். அவரிடம் நேற்று மாலை ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் துறை ரீதியான விசாரணை மேற்கொண்டார்.

Tags:    

Similar News