ஏரியில் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் துர்நாற்றம்
கோவிலூர் கிராமத்தில் உள்ள ஏரியில் கலக்கப்படும் கழிவு நீரால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அவலம் உள்ளதால் அதை சரி செய்து தர கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதி, நல்லம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட கோவிலூரில் உள்ள ஏரியில் சமீப காலமாக குப்பை கழிவுகள் ஏரியில் கொட்டப்படுகிறது வாடிக்கையாகி உள்ள நிலையில் தற்போது கோடை காலம் என்பதால் ஏரியில் நீர் வறண்டு காணப்படும் சூழலில், கழிவுநீர் ஏரியில் விடப்படுகிறது இதனால் ஒருபுறம் கழிவு நீர், மறுபுறம் குப்பைகளால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
இது குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் கிராம மக்கள் புகார் அளித்துள்ள நிலையில் சரியான குப்பை கிடங்கு இல்லாததால் குப்பைகளை அகற்ற முடியவில்லை என்றும் விரைவில் சுத்தம் செய்து தருவதாக உறுதி அளித்துள்ளனர். ஆனால் கழிவு நீர் மற்றும் குப்பைகளால் தொடர்ந்து அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் விரைந்து நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.