இறகுப்பந்து விளையாட்டரங்கம் - அமைச்சர் சேகர் பாபு அடிக்கல் நாட்டு
திருநகர் பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கம் பணியை அமைச்சர் சேகர் பாபு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.;
Update: 2024-03-14 03:00 GMT
அடிக்கல் நாட்டு விழா
இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு , மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் அண்ணாநகர் மண்டலம், வார்டு-95க்குட்பட்ட திருநகர், 20வது தெருவில் அமைந்துள்ள விளையாட்டுத் திடலில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ், ரூ.50 இலட்சம் மதிப்பில் கட்டப்படவுள்ள இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கத்திற்கான பணியினை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மேயர் பிரியா, வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வெற்றி அழகன், மத்திய வட்டார துணை ஆணையாளர் பிரவீன் குமார், மண்டலக்குழுத் தலைவர் ஜெயின், மாமன்ற உறுப்பினர் வாசு தீனதயாளன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.