இளையனார் வேலுார் கோவிலில் பாலாலயம்
Update: 2023-11-28 01:28 GMT
பாலாலயம்
காஞ்சிபுரம் ஒன்றியம், இளையனார் வேலுாரில் பழமையான பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம், கடந்த 2009 ஏப்., 13ல் நடந்தது. கும்பாபிஷேகம் நடந்து 14 ஆண்டுகள் கடந்த நிலையில், உபயதாரர்கள் வாயிலாக கோவிலில் ராஜகோபுரம், மூலவர் சன்னிதி, மஹா மண்டபம், உற்சவர் மண்டபம், சுற்றுச்சுவர், நவக்கிரஹ சன்னிதி உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. இதையொட்டி, கோவில் செயல் அலுவலர், சரக ஆய்வர், ஊராட்சி தலைவர் முன்னிலையில் நேற்று முன்தினம், மூலவர் தவிர்த்து பரிவார மூர்த்திகள், ராஜகோபுரம் ஆகியவற்றுக்கு பாலாலயம் நடந்தது.