பரமக்குடியில் கோவில் திருவிழா: பால்குடம் ஊர்வலம்
பரமக்குடியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு பால்குட ஊர்வலம் நடைபெற்றது.;
பால்குடம் எடுத்த பக்தர்கள்
ராமநாதபுரம் பரமக்குடி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு பால்குட திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அங்காள பரமேஸ்வரி மற்றும் வாணி கருப்பணசாமி கோயிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா நடைபெறும்.
இந்த ஆண்டு திருவிழா மார்ச் 6 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. மார்ச் 8 ஆம் தேதி மகா சிவராத்திரி, 10 ஆம் தேதி பாரிவேட்டை வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து இன்று காலை பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தனர்.
சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது. கோவில் பரம்பரை அறங்காவலர் ஜீவானந்தம் தலைமையில் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.