பால்குளம் ரூ 90 லட்சத்தில் சீரமைப்பு மேயர் மகேஷ் ஆய்வு
நாகர்கோவிலில் பால்குளம் ரூ 90 லட்சத்தில் சீரமைப்பு மேயர் மகேஷ் ஆய்வு.
Update: 2024-07-04 05:07 GMT
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட தெங்கம்புதூர் பகுதியில் பால்குளம் உள்ளது. இந்த குலத்திலிருந்து புத்தளம் பகுதியில் உள்ள வயல் பரப்புகள் பயன்படுத்தபட்டு வருகின்றன. பொதுமக்கள் இந்த குளத்தில் குளித்து வருகினர். இந்த குளம் தற்போது 90 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து குளத்தை மாநகராட்சி மேயர் மகேஷ் நேற்று ஆய்வு செய்தார். குளத்தில் தேவையான இடங்கள் தடுப்பு சுவர்கள் அமைத்தும், படித்துறைகள் அமைத்தும் குளம் மற்றும் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என மேயர் தெரிவித்தார். தொடர்ந்து அந்த பகுதியில் இருந்த நூலகத்தை ஆய்வு செய்த மேயர் நூலகத்தை மேம்பாடு செய்து மின் வசதி செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த நிகழ்ச்சியில் மண்டல தலைவர் முத்துராமன், கவுன்சிலர்கள் ஐயப்பன், ரமேஷ், ஜெயவர்த்தனம் உட்பட ஏராளம் போர் கலந்து கொண்டனர்.