மண்டைக்காடு அம்மன் வரலாறு புத்தகம் வெளியிடுவதை தடை செய்ய வேண்டும்
மண்டைக்காடு அம்மன் வரலாறு புத்தகம் வெளியிடுவதை தடை செய்ய வேண்டும் என இந்து முன்னணி புகாரளித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட இந்து முன்னணி தலைவர் கிருஷ்ணகுமார், பொதுச்செயலாளர் ராஜேஸ்வரன், மாவட்ட துணைத்தலைவர் கங்காதரன், பொருளாளர் வி என் மது, செயலாளர்கள் ஜான் கென்னடி, ராஜா ஆகியோர் நேற்று மாவட்ட எஸ்பி சுந்தரவதனத்திடம் ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
கன்னியாகுமரி மாவட்டத்தில் சக்தி வாய்ந்த பழமையான மண்டைக்காடு அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மற்றும் இந்து சமய கடவுள்கள் இறைவழிபாடுகள் மீது நம்பிக்கை இல்லாத எதிர்பாளர்கள் அரசு அனுமதிகள் பெறாமல் மண்டைக்காடு பகவதி அம்மன் வரலாறு என்னும் புத்தகம் எழுதி வெளியிட உள்ளனர். இதனால் மண்டைக்காடு பகவதி அம்மன் மீதும் கோவில் வழிபாடுகள் மீது நம்பிக்கை உடைய மக்கள் மத்தியில் குழப்பமான சூழல்கள் ஏற்பட்டு போராட்டங்கள் நடத்திடவும் சூழ்நிலையை திட்டமிட்டு ஏற்படுத்தி வருகிறார்கள். ஆகவே இந்து சமய எதிர்ப்பாளர்களால் மண்டை காட்டு அம்மன் வரலாறு எனும் புத்தக வெளியிடுவதை தடை செய்து குற்ற வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் புதிய வழிபாட்டு தலங்கள் கட்ட 30 நாட்களுக்குள் அனுமதி அளித்துள்ள அரசாணை அவசரங்கருதி ரத்து செய்ய வேண்டும். இந்த ஆணையால் மா மோதல்கள் உருவாக வாய்ப்பு உள்ளது. இதனால் இந்த அரசாணை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.