வாழைப்பழம் சூறை திருவிழா
வத்தலகுண்டு அடுத்த சேவுகம்பட்டி கிராமத்தில் வாழைப்பழம் சூறை திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்றது.;
Update: 2024-01-18 11:57 GMT
வாழைப்பழம் சூறை திருவிழா
சோலைமலை அழகர் பெருமாள் திருக்கோவில்
வத்தலகுண்டு அடுத்த சேவுகம்பட்டி கிராமம் உள்ளது. இங்கு பழமை வாய்ந்த சோலை மலை அழகர் பெருமாள் கோவில் உள்ளது. இங்கு இக்கோவிலுக்கு திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து வருகின்றனர். இங்கு வரும் பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடன் நிறைவேறிய பிறகு அழகருக்கு காணிக்கையாக வாழைப்பழத்தை கூடை, மாட்டுவண்டி, வேன் போன்றவற்றில் கொண்டு வந்து சூறையிடுகிறார்கள். அந்த வாழைப்பழம் சாப்பிட்டால் நல்லது என்று பொதுமக்கள் அந்த வாழைப்பழத்தை பொறுக்கி எடுத்து சாப்பிடுகின்றனர். இந்த ஆண்டு லட்சக்கணக்கான பழம் வந்ததாக கோவில் பூசாரி கூறினார்.