வாழைத்தார் விலை உயர்வு, விவசாயிகள் மகிழ்ச்சி

நாமக்கல், பரமத்தி வேலுார், மோகனூர், காட்டுப்புத்தூர் பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் வாழை பயிரிட்டுள்ளனர்.

Update: 2024-02-21 05:18 GMT

வாழைத்தார் 

நாமக்கல் மாவட்ட சுற்று வட்டார கோவில் விசேஷங்களால் வாழைத்தார் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி நாமக்கல், பரமத்தி வேலுார், மோகனூர், காட்டுப்புத்தூர் பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் வாழை பயிரிட்டுள்ளனர். இங்கு, பூவன், பச்சைநாடன், கற்பூரவல்லி, ரஸ்தாளி, மொந்தன் உள்ளிட்ட வகையான வாழைகளை பயிரிட்டு, தற்போது வாழைத்தார்களை வெட்டி வருகின்றனர். இவை, பரமத்தி வேலுாரில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டில் வைத்து விற்பனை செய்கின்றனர். ஏலத்திற்கு, 600 வாழைத்தார்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். கடந்த வாரம், 300 ரூபாய்க்கு விற்ற பூவன் வாழைத்தார், 500 ரூபாய்க்கும்; 300 ரூபாய்க்கு விற்ற ரஸ்தாளி, 400 ரூபாய்க்கும்; 300 ரூபாய்க்கு விற்ற கற்பூரவல்லி, 400 ரூபாய்க்கும்; மொந்தன் காய், 5 ரூபாய்க்கு விற்றது, 10 ரூபாய்க்கும் விற்பனையானது. கடந்த வாரத்தை விட, இந்த வாரம் வாழைத்தார் விலை அதிகரித்து விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Tags:    

Similar News