கடும் வெயிலால் கருகிய வாழை மரங்கள் கவலை அடைந்த விவசாயிகள்

சங்ககிரியில் கடும் வெயிலால் கருகிய வாழை மரங்களால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

Update: 2024-04-30 00:42 GMT

சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட தேவூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயிலால் வாழை மரங்கள் கருகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சங்ககிரியை அடுத்துள்ள தேவூர் சென்றாயனூர்,பெரமாச்சிபாளையம், ஒக்கிலிப்பட்டி ,தண்ணித்தாசனூர், பொன்னம்பாளையம்,சோழக்கவுண்டனூர் கைகோலபாளையம் ,பாலிருச்சம்பாளையம், காணியாளம்பட்டி ,வெள்ளாளபாளையம், குள்ளம்பட்டி ,அம்மாபாளையம் கோணக்கழுத்தானூர் ,செட்டிபட்டி, காவேரிபட்டி, செட்டிபாளையம் ,உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் கிணற்று பாசன தண்ணீரை பயன்படுத்தி 10மாதத்தில் அறுவடைக்கு வரக்கூடிய கதளி நேந்திரம் தேன் வாழை மொந்தன் வாழை ரஸ்தாளி உள்ளிட்ட ரக வாழை சாகுபடி செய்துள்ளனர்.

அவ்வாறு சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் வாழை கன்றுகள் செழித்து வளர்ந்து வாழை தார் விடும் முன்பு தேவூர் பகுதியில் கடந்த ஒரு மாதமாக சுட்டெரிக்கும் வெயிலால் வாழை கன்றுகள் மற்றும் வாழை தார் விட்டு பிஞ்சு காய்களுடன் இருக்கும் மரங்கள் மஞ்சள் நிறமாக மாறி கருகி உடைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர், மேலும் வாழை சாகுபடி செய்து பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் தோட்டக்கலை துறை அதிகாரிகள் பார்வையிட்டு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags:    

Similar News