சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கும்பகோணத்தில் ஒன்றிய அரசின் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் சங்கத்தினர் நேற்று நீதிமன்ற புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-07-05 09:36 GMT

ஆர்ப்பாட்டம் 

கும்பகோணத்தில் ஒன்றிய அரசின் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் சங்கத்தினர் நேற்று நீதிமன்ற புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய தண்டனை சட்டம் என்பது பாரதிய நியாய சம் கீதா எனவும், இந்திய சாட்சிகள் சட்டம் என்பது பாரதிய சாட்சிய எனவும் மற்றும் குற்றவியல் நடைமுறை சட்டம் என்பது பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா உள்ளிட்ட சட்டங்களின் பெயர்களை ஒன்றிய அரசு மாற்றம் மற்றும் திருத்தம் கொண்டு வந்து சட்ட மசோதாவை நேற்று முன்தினம் 01ம் தேதி முதல் ஒன்றிய அரசு அமல்படுத்தி உள்ளது. இதுபோல் தொடர்ந்து ஹிந்தி மற்றும் சமஸ்கிருதம் திணிப்பில் ஈடுபட்டு வரும் ஒன்றிய அரசை கண்டித்தும், மேற்கண்ட சட்ட மசோதாவை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி நாடெங்கும் உள்ள வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஒன்றிய அரசு மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டு குழு (JAAC) சார்பில் கும்பகோணம் நீதிமன்றம் முன்பு கும்பகோணம் வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் விவேகானந்தன் தலைமையிலும், ஜாக் கூட்டமைப்பின் துணைத்தலைவர்களும், முன்னாள் சங்க தலைவர்களுமான ராஜசேகர், சங்கர் மற்றும் சங்க செயலாளர் செந்தில்ராஜன் ஆகியோர் முன்னிலையிலும் வழக்கறிஞர்கள் நேற்று நீதிமன்ற புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கும்பகோணம் வழக்கறிஞர்கள் சங்க துணைத்தலைவர் இளங்கோவன், பொருளாளர் ராஜா சீனிவாசன், துணை செயலாளர் பாலாஜி, நூலக பொறுப்பாளர் லட்சுமி, நிர்வாக குழு உறுப்பினர் ஸ்ரீவித்யா, மூத்த வழக்கறிஞர்கள் சக்ரபாணி, கலியபெருமாள், அப்துல் சுபஹான் மற்றும் பெண் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News