புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை மூட வேண்டும்!

புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை மூட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு பரிசுத்த அமலோற்பவ மாதா மதுவிலக்கு சபைகள் மற்றும் போதை நோய் நலப்பணிக் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-07-09 05:30 GMT

புனித வெள்ளி

தூத்துக்குடி மறைமாவட்டம் அமலோற்பவ மாதா மதுவிலக்கு சபைகள் மற்றும் போதை நோய் நலப்பணிக்குழு இயக்குநர் அருட்தந்தை ஜெயந்தன் டி கிரேஸ் விடுத்துள்ள அறிக்கையில், "கிறிஸ்தவர்களின் நம்பிக்கையும் விசுவாசமான இயேசு இறந்த புனித வெள்ளி நாளை தியாகம் மற்றும் அமைதியின் நாளாக நாம் கடைபிடித்து வருகிறோம்.

ஆகவே, அந்த நாளில் அனைத்து மதுக்கடைகளையும் மூட உத்தரவு கோரி 03.03.2022 அன்று தமிழ்நாடு அரசுக்கு சிறுபாண்மை நல ஆணையர்குழு தலைவர் அல்போன்ஸ் பரிந்துரைத்த கோரிக்கையை வலுப்படுத்தி தொடர்ந்து அரசுக்கு பரிந்துரைத்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த நிலையில் தமிழ்நாடு டாஸ்மாக் வாணிப கழகத்தின் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில நிர்வாகம் தரப்பில் இருந்து மதுக்கடைகளை மூடுவது அரசின் கொள்கை சார்ந்த முடிவு என்பதை கூறி ஆகவே அரசின் கொள்கை முடிவில் மாற்றம் செய்ய அரசுக்கு பரிந்துரைக்குமாறு எங்களிடம் கேட்டுக் கொண்டார்கள்.

ஆகவே தற்போது நடைபெற இருக்கும் ஆயர் பேரவையில் இதை சிறப்பு தீர்மானமாக எடுத்த தமிழக முதல்வரின் கனிவான கவனத்திற்கு இதனை பரிந்துரை கடிதம் வழியாகவோ அல்லது நேரடியாகவோ கொண்டு சென்று இதை நிறைவேற்றி தருமாறு தமிழ்நாடு ஆயர் பேரவையை பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

Home Prohibition and Excise Department Policy Note 2013-2014 பக்கம் எண் 23 மற்றும் 24ல் கூறிப்பிட்டபடி மது விற்பனை இல்லாத சிறப்பு நாட்களான, "காந்தி ஜெயந்தி, திருவள்ளுவர் தினம், மகாவீரர் ஜெயந்தி, மிலாடி நபி, வள்ளலார் நினைவு. சுதந்திர தினம், குடியரசு தினம், மற்றும் உழைப்பாளர் தினம்”, போன்ற சிறப்பு நாள்களோடு புனித வெள்ளி நாளையும் சேர்த்து சட்ட மன்றத்தில் கொள்கை மாற்றம் செய்ய தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைக்குமாறு தமிழ்நாடு ஆயர் பேரவையினரை பணிவன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், மக்கள் தங்களின் அனைத்து சமய கலாசார பண்பாட்டு விழாக்கள் சிறப்பாகவும் மாண்போடும் நடைபெற அரசே முன்வந்து அந்தந்த சிறப்பு நாட்களைக் மாண்போடு நடத்த மதுக்கடைகளை மூட வலியுத்துமாறு வேண்டுகிறோம்.

மேலும் தமிழ்நாடு அரசின் வாக்குறுதிக்கேற்ப படிப்படியாக மதுபான கடைகளை குறைப்பதற்க்கும், பள்ளிகள், மசூதிகள், கோவில்கள், இரயில்வே நிலையங்கள், மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் மதுக்கடைகளை அகற்றுவதற்கும் ஆவணம் செய்ய வலியுறுத்துமாறு தமிழ்நாடு ஆயர் பேரவையை பணிந்து வேண்டி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News