சுத்தமல்லியில் நான்கு ஆட்டோக்களில் பேட்டரி திருட்டு
சுத்தமல்லியில் நான்கு ஆட்டோக்களில் பேட்டரி திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-07 14:53 GMT
காவல் நிலையம்
நெல்லை மாவட்டம் சுத்தமல்லி பாரதிநகர் ஈஸ்வரநகர் பகுதியில் ஆட்டோ நிறுத்தம் உள்ளது. இந்த நிறுத்தத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் முத்துக்குமார், கதிர்வேல், பால்ராஜ், மாணிக்கம் ஆகியோர் வெள்ளிக்கிழமை இரவு தங்களது ஆட்டோக்களை நிறுத்தியிருந்தனர்
மறுநாள் காலை வந்து பார்த்த போது 4 பேரின் ஆட்டோக்களில் பேட்டரி திருடு போயிருந்தது. இது குறித்த புகாரி அடிப்படையில் சுத்தமல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.