BC, MBC கல்லூரி விடுதிக் கட்டடங்கள் - முதல்வர ஸ்டாலின் திறந்து வைத்தார்.

BC, MBC கல்லூரி விடுதிக் கட்டடங்கள் - முதல்வர ஸ்டாலின் திறந்து வைத்தார்.;

Update: 2023-11-29 18:24 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நாமக்கல் மாவட்டம், குமாரப்பாளையத்தில் 100 மாணவர் தங்கும் வசதியுடன், 2 கோடியே 16 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவர் விடுதிக் கட்டடம், பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர், புதுக்கோட்டை மாவட்டம், மருதன்கோன், திருவாரூர் மாவட்டம், நன்னிலம், தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி என மொத்தம் ரூ. 12 கோடியே 54 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 5 விடுதிக் கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில்,நாமக்கல் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் ச.உமா, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர ரீட்டா ஹரீஷ் தக்கர், பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையர் அணில் மேஷ்ராம், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையர் வா. சம்பத் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News