பீச் வாலிபால் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற பெண் காவலரை

சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான பீச் வாலிபால் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற பெண் காவலரை நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.

Update: 2024-03-13 08:56 GMT

சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான பீச் வாலிபால் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற பெண் காவலரை நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.


சென்னை சின்ன நீலாங்கரை பகுதியில் நடைபெற்ற தேசிய அளவிலான பீச் வாலிபால் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளி பதக்கம் வென்ற பெண் காவலரை நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் நேரில் அழைத்து பாராட்டினார் . காரைக்கால் வீரபத்திரன் மகள் rசசிகலா (2இவர் தமிழ்நாடு காவல்துறையில்2023 ஆண்டில் பணிக்குச் சேர்ந்து தற்போது நாகை மாவட்ட ஆயுதப் படையில் காவலராக உள்ளார், இவர் சிறு வயதிலிருந்து பீச் வாலிபால் போட்டியில் மிகவும் ஆர்வம் கொண்டவராக இருந்த நிலையில் இந்திய அணிக்காக பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.

மேலும் தற்போது காவல்துறையில் பணிக்கு சேர்ந்தும் துறை ரீதியில் சிறப்பு அனுமதி பெற்று 08.03.2024 அன்று சென்னை, சின்ன நீலாங்கரையில் நடைபெற்ற தேசிய அளவிலான பீச் வாலிபால் போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் பரிசு வென்று வெள்ளி பதக்கம் பெற்றுள்ளார். 08.03.2024 - 10. 03.2024 கர்நாடகா,தமிழ்நாடு, தெலுங்கானா, கேரளா, குஜராத், ஹரியானா, இமாச்சல பிரதேசம், ஆந்திரா, மத்திய பிரதேசம் போன்ற 10 மாநிலங்களைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டதில் இவர் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். மேலும் இவர் கடந்த மாதத்தில் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார், கடந்த ஆண்டில் இவர் கோவா மாநிலத்தில் நடைபெற்ற பீச் வாலிபால் போட்டியில் கலந்து கொண்டு முதலிடத்தைப் பிடித்து தங்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் பெண் காவலரிடம் பேசுகையில் நீங்கள் தொடர்ந்து போட்டியில் கலந்து கொண்டு முதலிடத்தை பெற்று நம் மாநிலத்திற்கும், மாவட்டத்திற்கும், தமிழக காவல்துறைக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றும், நீங்கள் போட்டியில் ஜெயிப்பதற்கு தான் எந்த ஒரு உதவியும் செய்ய தயார் நிலையில் உள்ளதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பெண் காவலரிடம் கூறினார்கள், இதுகுறித்து பெண் காவலர் சசிகலா கூறுகையில் என் மீது நம்பிக்கை வைத்து பீச் வாலிபால் போட்டியில் பங்குபெற சிறப்பு அனுமதி வழங்க அனுமதி தந்த நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் த*ஹர்ஷ் சிங் தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

Tags:    

Similar News