பகவதி அம்மன் கோவில் 9 நிலையில் ராஜகோபுரம்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் 9 நிலையில் ராஜகோபுரம் 10 கோடியில் உருவாகிறது.;

Update: 2024-06-16 04:42 GMT

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் 9 நிலையில் ராஜகோபுரம் 10 கோடியில் உருவாகிறது.


இந்தியாவில் முக்கிய புண்ணிய ஸ்தலங்களில்  ஒன்றான கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நாடு முழுவதிலிருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு வடக்கு வாசலில் ராஜகோபுரம் கட்டுவதற்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு முடிவு செய்யப்பட்டு பல்வேறு ஆய்வுகள் நடைபெற்றன. அதன் பின்  தேவப்பிரசன்னமும் பார்க்கப்பட்டது.       

அதன்படி 120 அடி உயரமும், 66 அடி நீளமும், 40 அடி அகலத்தில் ஒன்பது நிலைகளுடன் 10 கோடியில்  ராஜகோபுரம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர கிழக்கு வாசலில் சாலக்கார கோபுரம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.      இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் காரணமாக இந்த பணிகள் கிடப்பில்  போடப்பட்டன. தற்போது தேர்தல் நடத்தை  விதிகள் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, நேற்று இணை ஆணையர் அலுவலகத்தில் காணொளி மூலம் கூட்டம் நடைபெற்றது.        

Advertisement

இந்த  கூட்டத்தில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் 120 அடி உயரத்தில் ராஜகோபுரம்  கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டது மேலும் கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ்  செயல்பட்டு வரும் குமரியில் உள்ள 24 வது சக்தி பீடமான பத்திரகாளி அம்மன் கோவில், குகநாதஸ்வரர் கோவில், சக்கர தீர்த்த காசி விஸ்வநாதர் கோயில் உட்பட 52 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.  இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் ராஜகோபுரம் கட்டும் பணி விரைவில் தொடங்கும் என்று தெரிகிறது.

Tags:    

Similar News