பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள பகவதி அம்மன் கோவிலில் நடைப்பெற்ற கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
Update: 2024-06-17 05:01 GMT
பொன்னமராவதி அருகே உள்ள நெய்வேலியில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. பல்வேறு புனித தளங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கலசங்கள் அடைக்கப்பட்டு யாகசாலையில் பூஜை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கும்பத்தில் ஊற்றப்பட்டது.நெய்வேலி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.