சாலைகள் சீரமைப்பு பணி உத்திரமேரூரில் துவக்கம் !

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சாலையை சீரமைப்புக்கான பூமி பூஜை விழா நடைபெற்றது.

Update: 2024-03-04 07:11 GMT

சாலைகள் சீரமைப்பு பணி

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம், மலையாங்குளத்தில் இருந்து, காப்புக்காடு வழியாக மருதம் செல்லும் 3 கி.மீ., தூரம் சாலை உள்ளது. படூர், காட்டாங்குளம், அமராவதிபட்டணம், ஆனம்பாக்கம், மலையாங்குளம் உள்ளிட்ட கிராமத்தினர், இச்சாலையை பயன்படுத்தி திருப்புலிவனம் வழியாக, உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இச்சாலை, சில ஆண்டுகளாக குண்டும், குழியுமாக உள்ளது. இச்சாலையை சீரமைக்க அப்பகுதியினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அக்கோரிக்கை ஏற்று, இச்சாலையை சீரமைக்க நிரந்தர மழை வெள்ள சேத தடுப்பு நிதியின் கீழ், 2.56 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது. உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று அடிக்கல் நாட்டி, சாலை பணியை துவக்கி வைத்தார். இதேபோன்று, சாலவாக்கம் - இடையாம்புதூர் இடையிலான, மாம்புதூர் பகுதி காப்பு காட்டு சாலை, 63 லட்சம் ரூபாய் செலவிலும், காவணிப்பாக்கம் கிராம சாலை 76 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைப்புக்கான பூமி பூஜை விழா நேற்று நடைபெற்றது. இதில், சாலவாக்கம் தி.மு.க., ஒன்றிய செயலர் குமார் மற்றும் உத்திரமேரூர் கோட்ட நெடுஞ்சாலை துறை பொறியாளர் அனந்தராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News