மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை,எம்எல்ஏ பங்கேற்கு
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை,எம்எல்ஏ பங்கேற்கு
By : King News 24x7
Update: 2024-03-10 13:48 GMT
சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 15-ல் உள்ளடங்கிய வார்டு எண் 196 தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய பகுதியான கண்ணகி நகரில் உள்ள 15656 குடியிருப்புகளுக்கு தெரு குழாய் மூலம் நாளொண்டிற்கு 3.5 மில்லியன் லிட்டர் குடிநீர் குழாய்கள் மூலம் குடியிருப்புகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வருகிறது. எனவே அந்த பழைய குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு குடிநீரில் கழிவுநீர் கலந்து கலங்களாக வருகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காணுகின்ற வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில், காணொளி மூலம் 69.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 38 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து அனைத்து பகிர்மான நெகிழிரும்பு குழாய்களாக சுமார் 18.84 கி.மீ நீளத்திற்கு மாற்றி அமைத்து அதிலிருந்து ஒவ்வொரு குடியிருப்புகளுக்கும் 300 லிட்டர் கொள்ளளவு கொண்ட சின்டெக்ஸ் டேங்க் தொட்டி மூலமாக குடிநீர் வழங்க உத்தரவிட்டார்.. அதனைத் தொடர்ந்து அதற்கான பூமி பூஜை விழாவில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.