குடிநீர் திட்டம்: பூமி பூஜை

பொன்னமராவதி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் அபிவிருத்தி திட்ட பணிகளுக்கான பூமி பூஜையை அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்.

Update: 2023-12-21 09:08 GMT

பொன்னமராவதி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் அபிவிருத்தி திட்ட பணிகளுக்கான பூமி பூஜையை அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டு பொதுமக்களுக்கும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய காவிரி கூட்டத்துக்கு குடிநீர் வீடு வீடுகளுக்கு இணைப்பு திட்டத்தை வழங்க ரூ 13.35 கோடி மதிப்பீட்டில் அதற்கான பூமி பூஜையை தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி தொடங்கி வைத்து இனிப்புகளை வழங்கினார்.

இதில் மாவட்ட ஆட்சியர் மேர்சிரம்யா உள்ளிட்டோர் பங்கேற்பு. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தேர்வுநிலை பேரூராட்சி பகுதிகளில் குடிநீர் அபிவிருத்தி பணிகளுக்கான ரூ13.35 கோடி மதிப்பீட்டில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் மூன்று லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும், பொன்னமராவதி பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டு பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாகவும், அனைத்து வீட்டுகளுக்கும் காவிரி கூட்டு குடிநீர் இணைப்புடன் கூடிய இத்திட்டத்திற்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.அதனைத் தொடர்ந்து கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ 9.15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆறு எண்ணிக்கைகளில் ஆன மின்கல வாகனத்தையும் பயன்பாட்டிற்காக பணியினை தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தொடங்கி வைத்து இனிப்புகள் வழங்கினார்.இந் நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் 15 வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

Similar News