தார் சாலை அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை
குண்டடம் ஊராட்சியில் தார் சாலை அமைக்கும் பணிகளுக்கு அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பூமி பூஜையை துவக்கி வைத்தனர்.
Update: 2024-03-12 11:30 GMT
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் வெள்ளகோவில் மு. பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஊராட்சி ஒன்றியம் மேட்டுக்கடையில் பல்லடம் தாராபுரம் சாலை முதல் குங்குமம்பாளையம் வரையிலும் கள்ளிப்பாளையம்- குங்குமம்பாளையம் வரையிலும் கண்ணாங்கோவில் ஊராட்சியில் உ. ஆலம்பாளையம் முதல் குள்ளாயிபாளையம் வரை தார் சாலைகள் அமைக்கும் பணியினை துவக்கி வைத்தார்கள். உடன் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன், உதவி கோட்ட பொறியாளர் (நெடுஞ்சாலை துறை)இளம்பூரணம் ஆகியோர் உள்ளனர்.