விருதுநகரில் பெண்களுக்கான மாபெரும் கபாடி

விருதுநகரில் பெண்களுக்கான மாபெரும் கபாடி நடைபெற்றது.

Update: 2024-04-12 16:25 GMT
மாவட்ட ஆட்சியர் 

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில், மக்களவை பொதுத் தேர்தல் 2024 முன்னிட்டு, தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக மாவட்ட அளவிலான 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாபெரும் கபாடி போட்டி நடைபெற உள்ளது. மக்களவை பொதுத் தேர்தல் 2024 முன்னிட்டு,

விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், அனைத்து தரப்பு வாக்களர்களும், 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் வகையிலும், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக முதல் முறை மற்றும் இளம் தலைமுறை வாக்காளர்களுக்கு கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்,

மாரத்தான், பேரணி, காபி வித் கலெக்டர், உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்து இடுதல், கையெழுத்து இயக்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மாவட்டத்தில் உள்ள 11 வட்டாரத்தில் ஆண்களுக்கான வட்டார அளவிலான கபாடி போட்டிகள் நடத்தப்பட்டு, தலா இரண்டு அணிகள் வீதம் மொத்தம் 22 ஆண்கள் அணிகளும், 18 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கான நேரடி மாவட்ட அளவிலான போட்டியில் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் அணிகளும் கலந்து கொண்டு பங்குபெறும் தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக மாவட்ட அளவிலான கபாடி போட்டி 13.04.2024- அன்று காலை 9.30 மணிமுதல் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் நடைபெற உள்ளது.

இப்போட்டியில் கால் இறுதி மற்றும் அரையிறுதி போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறும் அணிகள் இறுதி போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த மாவட்ட அளவிலான கபாடி போட்டியில் வெற்றி பெறும் ஆண் மற்றும் பெண் அணிகளுக்கு முதல் பரிசு ரூ.1 இலட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.50,000-மும், மூன்றாம் பரிசாக இரண்டு அணிகளுக்கு தலா ரூ.25,000-மும் வழங்கப்பட உள்ளது.

எனவே, இப்போட்டியில் இளம் வாக்காளர்கள், விளையாட்டு ஆர்வலர்கள், பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள் பங்கு பெற்று போட்டியினை கண்டுகளிக்குமாறு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

Similar News