திருப்பரங்குன்றம் நல்லூரில் பெரிய நாச்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
திருப்பரங்குன்றம் நல்லூரில் உள்ள பெரிய நாச்சி அம்மன் கோவிலில் தமிழில் வேத மந்திரங்கள் முழங்க நடை பெற்ற கோவிலின் முதல் கும்பாபிஷேகம் - ஏராளமான பக்தர்கள் தரிசனம்.
Update: 2024-02-22 09:40 GMT
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே நல்லூர் கிராமத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அமச்சியார் என்கிற பெரிய நாச்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது . இந்த கோவில் கூரை மேய பட்ட நிலையில் 100 ஆண்டுகளாக சாமி வைக்கப்பட்டு ஊர் மக்கள் தரிசனம் செய்து வந்த நிலையில் தமிழக அரசின் உதவியுடன் ஊர் பொதுமக்களால் கட்டி முடிக்கப்பட்ட திருக்கோவிலில் முன்னதாக, கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள யாக சாலையில் மூன்று நாட்கள் நடைபெற்ற ஐந்து கால பூஜைகள் நடத்திய பின்பு, பூஜையில் வைக்கப்பட்ட தீர்த்தங்களை தமிழ் மொழியில் வேத, மந்திரங்கள் முழங்க, சிவாச்சாரியார்கள் பூஜை நடத்திய பின்பு, கோவில் கோபுரத்தில் கலசங்கள் வைக்கப்படாமல் பண ஓலை வைக்கப்பட்டு மகா சம்ப்ரோஜனம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைத்துறை சார்பில் தக்கார் திருமதி. உ.சண்முகப்பிரியாள், திருமதி. சே.ஜெயலட்சுமி மதுரை தெற்கு கூடுதல் பொறுப்பு ஆய்வர், மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் கு. சுந்தரபாண்டியன், சி.குருமூர்த்தி ஆகியோர்கள் கலந்து கொண்டனர் மேலும் திருப்பரங்குன்றம் சுற்றியுள்ள கிராம பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் மேற்கொண்டனர்.இதனை தொடர்ந்து, கோவில் சார்பில் , கூடி இருந்த ஏராளமான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.