கஞ்சா சாக்லேட்டுகளுடன் பீகார் வாலிபர் கைது!

அவனாசி அருகே விற்பனைக்காக கஞ்சா சாக்லேட்டுகள் வைத்திருந்த பீகார் மாநில வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2024-06-03 11:40 GMT
கஞ்சா சாக்லேட்டுகளுடன் பீகார் வாலிபர் கைது!
பைல் படம்


  • whatsapp icon

அவிநாசியை அடுத்த அவிநாசிலிங்கம்பாளையம் அருகே கஞ்சா சாக்லேட் பீகார் வாலிபர் கைது! அவிநாசியை அடுத்த அவினாசிலிங்கம்பாளையம் அருகே கஞ்சா நடமாட்டம் உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து போலீசார் அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த பகுதியில் வந்து நின்ற பஸ்ஸிலிருந்து இறங்கிய நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த அசோக் மண்டல்( வயது 25) என்பதும் கஞ்சா சாக்லேட் வைத்து இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்த 40 கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்தனர்....

Tags:    

Similar News