ஆரல்வாய்மொழியில் பைக் கார் விபத்து - கல்வி நிறுவன ஊழியர் பலி
ஆரல்வாய்மொழியில் பைக் கார் விபத்தில் கல்வி நிறுவன ஊழியர் உயிரிழந்தார். மேலும் மனைவி குழந்தை காயம்.;
Update: 2024-03-08 04:37 GMT
கல்வி நிறுவன ஊழியர் பலி
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அடுத்த தோவாளை பகுதியை சேர்ந்தவர் சுடலை (30) இவரது மனைவி உமா பாரதி. இருவரும் வடக்கன் குளத்தில் உள்ள ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். நேற்று ஆரல்வாய்மொழி தபால் நிலையத்தில் ஆதார் கார்டு திருத்தம் செய்ய சுடலை தனது மனைவி மற்றும் குழந்தையுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது நாகர்கோவில் இருந்து திருநெல்வேலி நோக்கி வேகமாக வந்த சொகுசு கார் எதிர்பாராத விதமாக பைக் மீது மோதியது. இதில் உமா பாரதி மற்றும் குழந்தை இருவதும் கீழே விழுந்து காயமடைந்தனர். சுடலை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உமா பாரதி மற்றும் குழந்தை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். சுடலையின் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.