பைக் மெக்கானிக் திடீர் மரணம்
தட்டார்மடம் அருகே பைக் மெக்கானிக் திடீர் மரணமடைந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.;
Update: 2024-06-29 05:20 GMT
பலி
தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் அருகே உள்ள பள்ளிபத்து கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் முத்துக்குமார் (55). பைக் மெக்கானிக்கான இவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர். இவர் காந்திநகர் சந்திப்பு பகுதியில் இருசக்கரம் பழுது பார்க்கும் கடை நடத்தி வந்தார். மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததால் மனைவிக்கும், இவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் வீட்டிற்கு செல்லாமல் கடையிலேயே படுத்து தூங்குவாராம். இந்நிலையில் இன்று அவரது கடையில் திடீரென இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து தட்டார்மடம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலுமட் அவரது மரணத்திற்கு என்ன காரணம் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.