இருசக்கர வாகனம் திருட்டு
திருச்சி மாவட்டம், ஆண்டவர் குட்டை அருகே ஓமாந்தூர் அபினிமங்கலம் சாலையில் நிறுத்தியிருந்த மோட்டார் பைக்கை திருடியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;
Update: 2024-03-20 04:25 GMT
இருசக்கர வாகனம் திருட்டு
திருச்சி மாவட்டம், முசிறி தாலுக்கா சாத்தனூர் ஜி. ஹெச். சாலையைச் சேர்ந்தவர் 22 வயதான பாஸ்கர்.இவர் தனது மோட்டார் பைக்கை ஆண்டவர் குட்டை அருகே ஓமாந்தூர் அபினிமங்கலம் சாலையில் நிறுத்தியிருந்தார்.அப்போது மோட்டார் பைக்கில் இருந்து சத்தம் வந்துள்ளது.
இதை கவனித்த பாஸ்கர் மோட்டார் பைக்கை பார்த்த போது அடையாளம் தெரிந்த இருவர் மோட்டார் பைக்கை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். இது குறித்து புலிவலம் காவல் நிலையத்தில் பாஸ்கர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.