டூவீலரை திருடிய மர்ம நபர்கள்
அய்யலூர் முத்துநாயக்கன்பட்டியில் தங்கை வீட்டிற்கு வந்தவரின் பைக்கை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-15 06:41 GMT
பைக் திருட்டு
அய்யலூர் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (30). கார் டிரைவர். இவர் கடந்த மே 6ம் தேதி இரவு தனது டூவீலரை அய்யலூர் முத்துநாயக்கன்பட்டியில் உள்ள அவரது தங்கை பிரியங்கா என்பவரது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார். மறுநாள் காலை சென்று பார்த்த போது அங்கு நிறுத்தி இருந்த டூவீலரை காணவில்லை. மர்மநபர்கள் திருடி சென்றது தெரிந்தது. இதுகுறித்து ராஜேந்திரன் வடமதுரை போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் எஸ்ஐ கிருஷ்ணவேணி வழக்குப்பதிவு செய்து டூவீலரை தேடி வருகிறார்.