கோவில்பட்டி கோவிலில் உண்டியல் வருவாய் ரூ.11.15 லட்சம்!
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.11. 15 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.
Update: 2024-02-23 10:17 GMT
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவில் மற்றும் துணை கோவில்களான சொர்ணமலை கதிரேசன் கோவில், மார்க்கெட் சாலை முருகன் கோவில், சுந்தரராஜ பெருமாள் கோவில், தெப்பக்குளம் அருகே உள்ள விநாயகர் கோவில் ஆகிய கோவில்களில் உள்ள 22 உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு எண்ணும் பணி நடந்தது. செண்பகவல்லி அம்மன் கோவில் மண்டபத்தில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சங்கர், அறங்காவலர் குழு தலைவர் ராஜகுரு, உறுப்பினர் திருப்பதிராஜா, செண்பகவல்லி அம்மன் கோவில் நிர்வாக அலுவலர் வெள்ளைச்சாமி, இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் சிவகலைபிரியா ஆகியோர் முன்னிலையில் இந்த பணி நடைபெற்றது. இதில் கோவில் பணியாளர்கள், திருவாசகம் முற்றோதுதல் குழுவினர் உள்ளிட்டோர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். உண்டியல்களில் ரொக்கப்பணம் ரூ.11 லட்சத்து 15 ஆயிரத்து 741 இருந்தது. மேலும் பக்தர்கள் காணிக்கையாக தங்கம் 57.750 கிராம், வெள்ளி 90.900கிராம் ஆகியவை இருந்தன.