பறவைகள் பூங்கா கட்டுமானப் பணிகள் தீவிரம்
ஆசியாவிலேயே சிறப்புமிக்க பட்டாம்பூச்சி பூங்காவைத் தொடா்ந்து பறவைகள் பூங்காவை காவிரிப் படுகையில் கட்டமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
திருச்சி மாவட்டம் என்றாலே வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களான முக்கொம்பு, மலைக்கோட்டை, கல்லணை போன்ற சுற்றுலா தளங்கள்தான் நம் நினைவுக்கு வரும். இதேபோல ஸ்ரீரங்கத்தை அடுத்த மேலூா் நடுக்கரை கிராமத்தில், உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்காவும் பிரசித்தி பெற்றது. காவிரி, கொள்ளிடம் ஆறுகளுக்கிடையே 27 ஏக்கரில் உள்ள இந்த வண்ணத்துப்பூச்சி பூங்கா தமிழக அரசின் வனத்துறையால் பராமரிக்கப்படுகிறது.
மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா கடந்த 2012-ம் ஆண்டு, ஆசியாவிலேயே மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்காவாக இதை அறிவித்தாா். தற்போது இயற்கை அழகு மிகுந்த சுற்றுலாத் தலமாக இது மாறியுள்ளது. இதேபோல பறவைகள் பூங்காவையும் காவிரிக் கரையில் ஏற்படுத்த மாவட்ட நிா்வாகம் பூா்வாங்கப் பணிகளை கடந்தாண்டு மே மாதம் தொடங்கியது.
நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.13.70 கோடியில் (பொதுமக்கள் பங்களிப்புடன்) திருச்சி மாவட்டம், அந்தநல்லூா் ஊராட்சி ஒன்றியம், கம்பரசம்பேட்டை ஊராட்சியில் 1.63 ஹெக்டேரில் பறவைகள் பூங்கா அமைக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இரவு, பகலாக பணிகள் வேகமெடுத்துள்ளன. இந்தப் பணிகளை ஆட்சியா் பிரதீப்குமாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்