காட்டெருமைகள் முகாமிட்டுள்ளதால் கவனமுடன் போங்க...!
உதகை - குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் காட்டெருமைகள் முகாமிட்டுள்ளதால் கவனமுடன் வாகனங்களை இயக்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.;
Update: 2023-12-16 05:23 GMT
உதகை - குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் காட்டெருமைகள் முகாமிட்டுள்ளதால் கவனமுடன் வாகனங்களை இயக்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் காட்டெருமைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக குடியிருப்பு பகுதிகளுக்கும், சாலைகளிலும் திடீரென வருவதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலையில் உதகை குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் காட்டெருமைகள் முகாமிட்டுள்ளதால் வாகனங்களை கவனமுடன் ஏற்க வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.