குமரியில் பாஜக பிரச்சாரம்

குமரியில் பாஜக சார்பில் பொன் ராதாகிருஷ்ணன் பிரச்சாரம் செய்தார்.

Update: 2024-04-18 01:15 GMT

குமரியில் பாஜக சார்பில் பொன் ராதாகிருஷ்ணன் பிரச்சாரம் செய்தார்.


கன்னியாகுமரி  மக்களவை பாரதிய ஜனதா வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் இன்று ஈசன்தங்கு பகுதியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கினார். தொடர்ந்து கல்லுக்கட்டி, பூச்சிக்காடு, புதூர், புத்தேரி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். அப்போது பொன் ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-       கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரதிய ஜனதா ஆட்சியின் போது பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆசாரிப்பள்ளம்  அரசு மருத்துவக் கல்லூரி, சுசீந்திரம் புறவழிச்சாலை, பார்வதிபுரம், மார்த்தாண்டத்தில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது.      கன்னியாகுமரி - திருவனந்தபுரம், கன்னியாகுமரி - சென்னை இடையே இரட்டை இரயில் பாதை திட்டம்  கொண்டுவரப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த நரிக்குளம் பாலப் பணியை முடிக்க நடவடிக்கை மேற்கொண்டோம்.      தற்போது பல திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் கிடக்கிறது. நான்கு வழிச்சாலை திட்ட பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. நான் அந்த துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்து அதன் அடிப்படையில் தற்போது 1045 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.       இன்னும் உங்களுக்காக பணியாற்ற எனக்கு இந்த முறை வாய்ப்பு தாருங்கள். தாமரை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்தால் நான் கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக உழைப்பேன் என்று அவர் பேசினார்.
Tags:    

Similar News