தமிழகத்தில் பாஜ., காலூன்ற முடியாது - அமைச்சர் ரகுபதி

குட்டிக்கரணம் அடித்தாலும் தமிழகத்தில் பாஜ., காலூன்ற முடியாது என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

Update: 2024-02-29 08:03 GMT

குட்டிக்கரணம் அடித்தாலும் தமிழகத்தில் பாஜ., காலூன்ற முடியாது என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். 

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி தமிழகத்தில் மோடி மஸ்தான் வேலைகள் எடுபடாது. குட்டிக்கரணம் அடித்தாலும் பாஜக தமிழகத்தில் வளராது. காலூன்ற முடியாது மோடியிடம் மரியாதையை நாங்கள் எதிர்பார்க்கவில்லை தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக மறைந்த தலைவர் கருணாநிதி புகழை யாராலும் மறைக்க முடியாது அவரது புகழை மோடிக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை மத்திய அரசு திட்டங்களை தமிழக அரசு புறக்கணித்தது கிடையாது.

சாந்தன் உடலை மத்திய அரசு மூலமாக இலங்கைக்கு அனுப்புவதற்கு முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது அதே போன்று ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யும் அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளது. தமிழகத்தில் மோடி மஸ்தான் வேலைகள் எடுபடாது குட்டிக்கரணம் அடித்தாலும் பாஜக தமிழகத்தில் வளராது. காலூன்ற முடியாது மோடியிடம் மரியாதையை நாங்கள் எதிர்பார்க்கவில்லை தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக மறைந்த தலைவர் கருணாநிதி புகழை யாராலும் மறைக்க முடியாது

அவரது புகழை மோடிக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை தமிழ்நாட்டில் இன்றைக்கும் கருணாநிதி கொண்டு வந்த திட்டங்கள் மக்களுக்கு பயன் அளிக்க கூடியதாக உள்ளது இவைகள் மோடிக்கு தெரியாமல் போய் இருக்கலாம் அல்லது தெரிந்து மறந்து இருக்கலாம் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா பெயரை மோடி உச்சரித்தாலும் அவர்களுக்கு வாக்குகள் கிடைக்கப்போவது கிடையாது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 இடங்களிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் மத்திய அரசு திட்டங்களை தமிழக அரசு புறக்கணித்தது கிடையாது...

மத்திய அரசு திட்டங்களில் மத்திய அரசின் பங்களிப்பு குறைவு மாநில அரசின் பங்களிப்பு அதிகம் இருப்பினும் மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களை மாநில அரசு தொடர்ந்து செய்து வருகிறது.

Tags:    

Similar News