3 மாநில தேர்தல் வெற்றி - பாஜகவினர் கொண்டாட்டம்

பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

Update: 2023-12-04 08:37 GMT

பாஜக வெற்றி கொண்டாட்டம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கடந்த மாதம் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், தெலுங்கானா உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் நடைபெற்று முடிந்த சத்தீஸ்கர், தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட நான்கு மாநில தேர்தல்களில் பதிவான வாக்குகள் என்னும் பணி நடைபெற்றது. இதில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய வெற்றியை பெற்று உள்ளது. இந்த நிலையில் இந்த வெற்றியை இந்தியா முழுவதும் உள்ள பாஜக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பாஜகவின் 3 மாநில தேர்தல் வெற்றியை சிவகங்கை பாஜக உதயா தலைமையிலான பாஜக நிர்வாகிகள் ஏராளமானோர் சிவகங்கை பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்

Tags:    

Similar News