பா.ஜ., ஆர்ப்பாட்டம்.
ரேஷன்கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வலியுறுத்தி தென்னங்கன்றுடன் கரூரில், பா.ஜ., விவசாய அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சமையலுக்கு பயன்படுத்துவதற்காக, தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பாமாயில் வழங்கப்படுகிறது. பாமாயில் பயன்படுத்துவதால் உடலுக்கு தீங்கு ஏற்படும் என்பது தெரிந்தும், தொடர்ந்து பாமாயிலை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள தென்னை விவசாயிகள் உரிய விலை கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இதனால், தேங்காயிலிருந்து எடுக்கப்படும் தேங்காய் எண்ணெய் தரமாக இருப்பதால், சமையலுக்கு அதை பயன்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல மாதங்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் விவசாயிகள்.
அரசு இதற்கு செவிமடுக்காதல், இன்று கரூர் மாவட்ட பிஜேபி விவசாய அணி சார்பில் பொது மக்களுக்கு ரேஷன் கடையில் தேங்காய் எண்ணெய் வழங்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் விவசாய அணியின் மாவட்ட தலைவர் அக்னிஸ்வரா செல்வம் தலைமையில், கரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன்பு நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பிஜேபி கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர்கள் சக்திவேல்முருகன், ஆறுமுகம், நவீன் குமார், மாவட்ட துணை தலைவர்கள் சுப்பிரமணி மற்றும் செல்வம் உள்ளிட்ட மாவட்ட அளவிலான கட்சியின் பல்வேறு அணிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் தென்னங்கன்றுடன் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.