பாஜக வேட்பாளர் தொடர்பாக வதந்தி: மாவட்ட தலைவர் விளக்கம்

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் தொடர்பாக வதந்தி பரவி வருவதாக கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்தன் விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2024-03-19 09:55 GMT

பாஜக மாவட்ட செயலாளர் விளக்கம்

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் தொடர்பாக வதந்தி பரவி வருவதாக கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்தன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "கடந்த சில நாட்களாக தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் சம்பந்தமாகவும், பா.ஜ.க வேட்பாளர் சம்பந்தமாகவும் போலியான Letter Pad மூலம் உண்மைக்கு புறம்பாக கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக கட்சிக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் வாட்ஸ் அப் மற்றும் இணையதளங்களில் வரக்கூடிய செய்திகள் தவறானது. தூத்துக்குடி பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்திலிருந்நு வரக்கூடிய அதிகாரப்பூர்வச் செய்திகள் மட்டுமே உண்மை. இதை அனைத்து ஊடகங்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News