எம்ஜிஆர்,ஜெ.,மீது பாஜகவிற்கு மரியாதையும்,அன்பும் உள்ளது - தினகரன்

எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா மீது பாஜகவிற்கு மரியாதையும்,அன்பும் உள்ளது. கோயில் வளாகத்தில் அமர்ந்து கொண்டு நல்ல விஷயங்களை பேசுவோம் எடப்பாடி பழனிச்சாமி போன்ற எதிர்மறையான, அரக்கத்தனமான ஜென்மங்களை குறித்து இங்கு பேசுவது சரி இல்லை என டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

Update: 2024-04-22 05:15 GMT

 டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பு 

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும் தேனி பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான டிடிவி தினகரன் கம்பம் நகருக்கு வருகை புரிந்தார். கம்பத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மதுபால் தாயி அம்மன் கோவில் விழாவிற்கு வருகை புரிந்த அவருக்கு கம்பம் நுழைவு பகுதியில் கட்சி நிர்வாகிள் பட்டாசு வெடித்து உற்சாகமாக வரவேற்பளித்தனர் அதனைத் தொடர்ந்து கம்பம் காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மது பால் தாயி அம்மன் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவில் நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்ட அன்னதானத்தில் கலந்துகொண்டு உணவருந்தினார் .

அதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் டிடிவி தினகரன் பேசுகையில்,   தேர்தல் முடிந்த பின்பு இரண்டு நாட்களாக இங்கு தான் உள்ளேன் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் நீங்க அமோக வெற்றி பெறுவீர்கள் என கூறுகின்றனர். நான் கருத்துக்கணிப்பெல்லாம் நடத்தவில்லை மக்கள் சொல்கிற கருத்துக்களை கேட்டுக்கொள்கிறேன். 14 ஆண்டுகளுக்குப் பின் அரசியல் ரீதியாக வந்தாலும் இடையில் சில ஆண்டுகளாக இந்த தேனி பகுதிக்குள் வந்து சென்று கொண்டுள்ளேன் தற்போது வேட்பாளராக வந்த போது மக்கள் அவரது இல்லங்களில் ஒருவராக என்னை பாவித்து உற்சாகமாக வரவேற்கின்றனர்.

தேனி நாடாளுமன்ற தொகுதியில் எல்லோரும் என்னை ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது 1999 இல் நான் தேர்தலில் நின்றேன் அப்போது ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை 2011 பிறகு தேர்தலில் பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவியுள்ளது நான் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டபோது கூட எடப்பாடி பழனிச்சாமி வாக்குக்கு 10,000 கொடுத்தனர் இதனால் எங்கள் கட்சியை சேர்ந்த சிலர் டோக்கன் கொடுத்தனர் அது எனது கவனத்திற்கு வந்ததும் அதை தடுத்து நிறுத்தினேன் ஆனால் நான் டோக்கன் கொடுத்ததாக தவறான செய்தியை பரப்பினர் என்னை ஒவ்வொருவரும் அவர்களது வீட்டுப் பிள்ளையாக கருதுகின்றனர் சொந்தமாக கருதி என்னை வரவேற்கின்றனர். அவர்களை அவமதிக்கும் விதமாக ஓட்டுக்கு பணம் கொடுக்க விரும்பவில்லை அவர்கள் என்னை வெற்றியிடச் செய்தால் தொடர்ந்து அவர்களுக்கான என்ன ஒரு உதவி செய்ய வேண்டுமோ அதனை செய்வேன்.

  எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா மீது பாஜக என்ற கட்சிக்கு பெரிய மரியாதையும் அன்பும் உள்ளது என்றும் ஜெயலலிதாவின் கட்சியை அழிந்து விடக்கூடாது நல்லவர்கள் கையில் வர வேண்டும் என நினைத்து அண்ணாமலை பேசியுள்ளார். என் டி ஏ கூட்டணி இந்த தேர்தலில் மோடி அவர்கள் பிரதமராக வரவேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டு மக்களும் அவருக்கு ஆதரவளிக்கும் விதமாக இந்த முறை உறுதியாக நல்ல வாக்கு சதவீதம் வித்தியாசத்தில் பெரும் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி குறித்து கேட்டபோது கோவிலில் அமர்ந்து நல்ல விஷயம் பேசுகிறோம் எடப்பாடி பழனிச்சாமி எதிர்மறையான மனிதர்கள் அல்லாது அறக்கத்தனமான ஜென்மங்களை பற்றி இங்கு பேசுவது சரியல்ல எனக் கூறினார் .

Tags:    

Similar News