பாஜக ஒரு ஆபத்தான கட்சி - செல்வபெருந்தகை பேச்சு

பாஜக ஒரு ஆபத்தான கட்சி என களியக்காவிளையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை பேசினார்.

Update: 2024-04-08 08:15 GMT

 செல்வபெருந்தகை தேர்தல் பிரசாரம்  

குமரி மாவட்டம் களியக்காவிளையில் நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் தாரகைகத்பர்ட் ஆகியோரை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை பேசியதாவது,18 வது மக்களவை தேர்தலில் நாட்டிற்கு தேவை ஜன நாயகமா? சர்வதிகாரமா? என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்திருக்கிறது.

சர்வாதிகாரத்தை வீழ்த்த வேண்டும், ஜனநாயகம் காக்க வேண் டும் என்பதற்கான தேர்தல் இந்த தேர்தல் .இந்த நாட் டுக்கு விடுதலை வாங்கி கொடுத்த அணிஒருபக்கம், இன்னொரு பக்கம் நாட் டிற்கு துரோகம் செய்தவர்கள் அணி. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு ஆண்டுகளில் சொன்ன வாக்குறுதிகளில் 80 சதவீ தம் நிறைவேற்றி விட்டார். மகளிருக்கு இலவச பயணம் அளித்தார். பால் விலையை குறைத்தார். பெட்ரோல் விலையை குறைத்தார்.

கொரோனா நிவாரணம் கொடுத்தார். மகளிர் உரி மைத்தொகை ஆயிரம் கொடுத்தார். இதெல்லாம் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள். இவை தவிர இல்லம்தோறும் கல்வி, மக்களைத்தேடி மருத்துவம், புதுமைப்பெண் திட்டம், காலை உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார். காங்கிரஸ் மிகப்பெரிய பிரகடனத்தை வெளியிட்டுள்ளது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பெண்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுப்போம் என்று கூறியுள்ளனர் தமிழ்நாடு அரசு வழங்கும் தொகையுடன் ஒவ்வொரு தாய்மார்களுக்கும் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 12 ஆயிரம் கிடைக்கும் என அவர் தெரிவித்தார். இந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் ஏராளமான பங்கேற்றனர்.

Tags:    

Similar News