பாஜ., வெறிபிடித்த மதவாதக் கட்சி; திண்டுக்கல் சீனிவாசன் விமர்சனம்
பாஜ., வெறிபிடித்த மதவாதக் கட்சி' அதனால்தான் கூட்டணியில் இருந்து வெளியேறினோம் என்று திண்டுக்கல் சீனிவாசன் விமர்சித்துள்ளார்.;
Update: 2024-02-27 06:28 GMT
பாஜ., வெறிபிடித்த மதவாதக் கட்சி' அதனால்தான் கூட்டணியில் இருந்து வெளியேறினோம் என்று திண்டுக்கல் சீனிவாசன் விமர்சித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சி வெறிபிடித்த மதவாதக் கட்சி, அதனால்தான் கூட்டணியில் இருந்து வெளியேறினோம் என்றும், பழைய ரயில்களுக்கு நிறம் மாற்றி, வடிவம் மாற்றி கட்டணத்தை உயர்த்தி மத்திய அரசு கொள்ளை அடிப்பதாக முன்னால் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விமர்சனம் செய்தார். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே வயலூரில் ஜெயலலிதாவின் 76ம் ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அஇஅதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும், அதிமுக பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.