பாஜக மக்களுக்கான அரசியல் செய்கிறது...!

பாஜக மக்களுக்கான அரசியல் செய்கிறது என மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ் தெரிவித்துள்ளார்.

Update: 2024-01-20 12:24 GMT

பாஜக விவசாய அணி 

காலிங்கராயன் பாளையத்தில் காலிங்கராயன் தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு பாஜக மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நாகராஜ் , காலிங்கராயன் வாய்க்கால் மாசடைந்துகொண்டிருக்கிறது , இது காப்பாற்ற வேண்டும் எனில் சாய கழிவுகள் கலப்பதை அரசு தடுக்க வேண்டும் என்றார்.

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் செயல்படுத்த முடியாத திறன் அற்ற அரசாக திமுக உள்ளது என குற்றம்சாட்டிய நாகராஜ் , பாஜக மக்களுக்கான அரசியல். செய்கிறது என்றும் காங்கிரஸ் மற்றும் திமுக வாக்கிற்கான அரசியல் செய்கிறது என்றார்.

Tags:    

Similar News