பா.ஜ.க தேர்தல் அறிக்கை: மக்கள் கருத்து தெரிவிக்கும் வாகனம்

பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து மக்களே தெரிவிக்க வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டது.

Update: 2024-03-09 10:29 GMT

செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர்

ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் வேதானந்தம் பா.ஜ.க கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது , இன்று முதல் 10 நாட்களுக்கு பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய வாக்குறுதிகளை மக்களே வழங்க வசதியாக ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதிக்கு 2 வாகனங்கள் வர உள்ளதாகவும் ,

அதிலுள்ள பெட்டியில் , மக்கள் தங்கள் இடத்தில் இருந்தே பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய அம்சங்களை மக்களே வழங்கலாம் என்றார்.இந்த வாகனங்கள் ஈரோடு மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சென்று தேர்தல் வாக்குறுதியில் இடம் பெற வேண்டிய வாக்குறுதிகளை பெறுவார்கள் என்றார்.

இந்த தேர்தலில் பா.ஜ.க அதிக இடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக மோடி தலைமையில் ஆட்சி அமைப்போம் என்றார்.

Tags:    

Similar News