அயோத்தி பக்தர்களை வழியனுப்பி வைத்த பாஜ.க,வினர்
அயோத்தியில் ராமரை தரிசிப்பதற்காக பாஜ.க, சார்பில் சார்பாக முதல் கட்டமாக 216 பக்தர்கள் திண்டுக்கல்லில் இருந்து பஸ் மூலமாக திருப்பூர் சென்றனர்.;
Update: 2024-02-17 10:24 GMT
அயோத்தி பக்தர்களை வழியனுப்பி வைத்த பாஜ.க,வினர்
அயோத்தியில் ராமரை தரிசிப்பதற்காக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பாக முதல் கட்டமாக 216 பக்தர்கள் திண்டுக்கல்லில் இருந்து பேருந்து மூலம் திருப்பூர் செல்கின்றனர். திருப்பூரில் இருந்து ரயில் மூலமாக அயோத்தி செல்கின்றனர். இவர்களை வழி அனுப்பும் நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட தலைவர் தனபாலன் கொடியசைத்து துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:இந்து அரசு இந்து கோயில்களை தன் வசம் வைத்து நம்மளை வழிபாடு நடத்துவதற்கு பல தடைகளை ஏற்படுத்தி வருகிறது. மோடி அரசு பல இடையூறுகளையும் தாண்டி, ராமர் கோயிலை திறந்து உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் அனைவரும் வரும் இலக்கை ஏற்படுத்தி உள்ளது. இதை நாம் போற்ற வேண்டும். வாழ்த்த வேண்டும்.